• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அரபு எமீர் குடியரசின் கல்வி, உயர்கல்வி அலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் உயர்கல்வி துறைசார்ந்த ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- உயர் கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பினை பலப்படுத்துதல், இரு நாடுகளினதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் விருத்தி செய்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு ஐக்கிய அரபு எமீர் குடியரசின் கல்வி, உயர்கல்வி அலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் உயர்கல்வி துறைசார்ந்த ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.