• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
10. ரஷ்சிய தொழில் மற்றும் சமூக உறவுகள் பற்றிய சங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய தொழிற்கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- தொழிற் கல்வித்துறையை விரிவுபடுத்துவதற்கு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தேசிய தொழிற்கல்வி நிறுவனமானது இயங்குகின்றது. அதன் நோக்கங்களை வெற்றி கொள்வதற்கு உள்நாட்டு அதேபோன்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக தொழிற்துறை தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் சம்பந்தமான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் தொழிற்கல்வித்துறை கூட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் வசதிகளைச் செய்யும் நோக்கில் ரஷ்சிய தொழில் மற்றும் சமூக உறவுகள் பற்றிய சங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய தொழிற்கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ. ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.