• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் 10 ஆவது விமான சேவைகள் உடன்படிக்கை மாநாட்டை 2017 திசெம்பர் மாதம் இலங்கையில் நடாத்துதல்
- 1944 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சருவதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தின் (சிக்காகோ சமவாயம்) நிருவாக மற்றும் முகாமைத்துவ நோக்கங்கள் சார்பில் ஐக்கிய நாடுகளின் முகவராண்மையொன்றான சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பு (ICAO) தாபிக்கப்பட்டுள்ளதோடு, 1948 யூன் மாதத்திலிருந்து இலங்கை இந்த அமைப்பின் உறுப்பு நாடாக பெயற்படுகின்றது. விமான சேவைகள் உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளின் வினைத்திறனை மேம்படுத்தி விமான சேவைகள் உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடும் மைய கூட்ட இடமொன்றை சகல உறுப்பு நாடுகளுக்கும் வழங்கும் நோக்கில் "விமான சேவையின் உடன்படிக்கை மாநாடு" சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டு சார்பில் இந்த மாநாடானது 2017 திசெம்பர் 04-08 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடாத்துவதற்கான அனுசரணை வகிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.