• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டம்
- இலங்கையின் பிரதான சுற்றுலா வலயமாக கல்பிட்டி மற்றும் புத்தளம் களப்பு சார்ந்த பிரதேசங்களை விருத்தி செய்வதற்கான உயர் சாத்தியம் நிலவுகின்றது. பிரதேசத்தின் உயிரின பல்வகைமையை மேம்படுத்துதல், பாதுகாத்தல், பிரதேசவாழ் மக்களை பலப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையில் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல், புத்தளம் மாவட்டத்தினுள் நிலவும் பிரதான சுற்றுலாத் தொழில்களை முதன்மைப்படுத்தி தேசிய உற்பத்திகளுக்கு உயர் பங்களிப்புகளை வழங்குதல், மக்களின் வருமான வழிகளை விருத்தி செய்தல், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் இந்தப் பிரதேசத்தை நிலையான சுற்றுலா வலயமொன்றாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்டு "புத்தளம் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின்" கீழ் கருத்திட்டமொன்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சும் இணைந்து 2017 மற்றும் 2018 ஆகிய இரு வருடங்களினுள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.