• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் சுற்றுலாத்துறையின் சந்தை வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- சுற்றுலாத்துறையினுள் வர்த்தக வசதிகளை அபிவிருத்தி செய்வதனை இலக்காகக் கொண்டு 04 வருட காலப்பகுதிக்குள் 12 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர்களை முதலீடு செய்து சந்தை வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுலா பயணிகளை கவரும் இடங்கள், செயற்பாடுகள் என்பவற்றை இனங்காண்பதன் மூலம் சுற்றுலாத் தொழிலின் பல்வகைமை, சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முயற்சிகள் பிரபல்யப்படுத் தப்படாத பிரதேசங்களில் குறித்த தொழில்முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட உயர் தரம் வாய்ந்த பொருட்களுக்கு சர்வதேச நுகர்வோரை கவர்தல், இலங்கையில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் டிஜிட்டல் தொழினுட்பத்தின் மூலம் சருவதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிகளை ஏற்பாடு செய்தல் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு உத்தேச கருத்திட்டத்தின் குறிக்கோளாகும். இதற்கமைவாக, உத்தேச சந்தை வசதி அபிவிருத்தி கருத்திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.