• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நிதியுதவி
- ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை - சுகாதார விஞ்ஞான பீடம் என்பவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் கருவிகளையும் வழங்குவதன் மூலம் இந்த பீடங்களின் கல்வி மற்றும் பயிற்சி வசதிகளின் தரத்தை ஏனைய அரசாங்க பல்கலைக்கழகங்களில் நிலவும் தரத்துக்கு சமமான மட்டத்திற்கு கொண்டுவரும் முக்கிய தேவை நிலவுகின்றது. இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதி ஒஸ்றியா வங்கியொன்றிடமிருந்து மிகுந்த சலுகை நிபந்தனைகளின் கீழ் ஏற்பாடு செய்து கொள்வதற்கு உரியதாக இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கும் இது தொடர்பிலான கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.