• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக சுற்றாடல் கல்வி தொடர்பில் அரசாங்க ஆசிரியர்களுக்கு அறியச் செய்விக்கும் கருத்திட்டம்
- காலநிலை மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தல் இதன்மூலம் உருவாகும் சேதங்களை குறைத்தல், அவற்றுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளல், சுற்றாடலை பாதுகாத்தல் போன்றவை சம்பந்தமாக அரச தலைவர்கள் மற்றும் சுற்றாடல் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட சமவாயங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் முறையான கல்வியை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் காலநிலை மற்றும் சுற்றாடல் சவால்களுக்கு முகங்கொடுப்பது சம்பந்தமாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறியச் செய்விக்கும் நோக்கில், புதிய பாடத்திட்டங்களை தயாரிக்கும் போது தரம் 6 இலிருந்து தரம் 11 வரை விஞ்ஞான பாடத்திட்டத்தில் சுற்றாடல் விடயத் தொகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் துறை தொடர்பான பிழையற்ற புரிந்துணர்வை பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் பாடசாலை பிள்ளைகளின் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்குவதற்காக சுற்றாடல் கல்வி தொடர்பில் அரசாங்க ஆசிரியர்களுக்கு அறியச் செய்விக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.