• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கருத்திட்ட இலக்கம் - 2
- ஆசிய அபிவிருத்தி வங்கி / Agency Franchise Development ஊடாக வழங்கப்படும் நிதியங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கருத்திட்ட இலக்கம் - 2 இன் கீழ் 15,000 கன மீற்றர் கொள்ளளவுடன் கூடிய கொத்தட்டுவ நிலக்கீழ் நீர்த்தேக்கம், கொத்தட்டுவ நீர் பம்பி நிலையம் மற்றும் உந்துசக்தி பம்பி நிலையம் என்பவற்றை நிருமாணித்தல் மற்றும் நீர் விநியோகம் என்பவற்றுக்காக மில்லிமீற்றர் 1200 DI குழாய்களை வழங்கி பதிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.