• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச வாக்காளர்களை பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சம்பந்தமாகவுள்ள அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகள்
- முன்னர் நிலவிய மோதல் நிலைமை காரணமாக நாட்டின் வட மாகாணத்திலுள்ள அவர்களுடைய வசிப்பிடங்களையும் சொத்துக்களையும் கைவிட்டு நாட்டின் வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள தற்காலிக வசிப்பிடங்களில் மற்றும் தங்குமிடங்களில் குடியிருக்கும் இடம்பெயர்ந்தவர்களினதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களினதும் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த 2013 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க வாக்காளர்களை பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2015 யூன் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இது சம்பந்தமாக பரிசீலனை செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக இந்த சட்டத்தின் நோக்கத்தினை அடைவதற்கு மேலும் இது தேவைப்படுகின்றமையினால், இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் அமுலுக்குவரும் காலப்பகுதியை மேலும் 4 வருடங்களுக்கு நீடிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர்களை பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த உபகுழுவின் தலைவராக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.