• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவகத்தை கூட்டிணைத்தல்
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் "இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவகத்தை" புறம்பான சட்டபூர்வ நிறுவனமொன்றாக பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் கூட்டிணைக்கும் தேவையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, இதற்காக வரையப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவன சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.