• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை தொழில்பயிற்சி தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- இரத்மலானை தொழில்பயிற்சி தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் தொழினுட்ப பட்டப்படிப்பினை சுமார் 1600 மாணவர்கள் மேற்கொள்வதோடு, இந்த பாடநெறியை கற்பதற்கு வரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் இந்த மாணவர்களில் கணிசமான அளவினர் கொழும்பிலிருந்து தூரப் பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களாவர். இந்த மாணவர்களுக்கு இருப்பிட வசதிகளை வழங்குவதற்குப் போதுமான விடுதி வசதி பல்கலைக்கழகத்தில் இல்லாததோடு, இங்கு தற்போதுள்ள சிற்றுண்டிச்சாலையின் இடவசதியும் வரையறுக்கப்பட்டதாகும். இதற்கமைவாக 600 மாணவர்களுக்கான வசதிகளுடன் புதிய விடுதியொன்றையும் ஒரே தடவையில் 300 பேர்களுக்கு வசதியளிக்கக்கூடிய சிற்றுண்டிச்சாலை யொன்றையும் தொழிற்பயிற்சி வழங்கும் வேலைக்களமொன்றையும் 927.34 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.