• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையொன்றைத் தாபித்தல்
- சமூக - பொருளாதார அபிவிருத்திக்கான விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்குகை சார்பில் செய்யப்படும் முதலீட்டிலிருந்து உச்சப்பயனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தற்போது 21 வரிசை அமைச்சுக்களினால் நிருவகிக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் சுமார் 80 க்கு மேற்பட்ட பல்வேறுபட்ட ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஆராய்ச்சி நிலையங்களையும் உரிய வகையில் ஒருங்கிணைப்பதனை இலகுபடுத்துவதற்காக "தேசிய விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையொன்ற" பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.