• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பூங்காக்களையும் புதிய வனசீவராசிகள் சரணாலயங்களையும் பிரகடனப்படுத்தல் மற்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களின் எல்லைகளை மீளமைத்தல்
- இலங்கையில் இயற்கை வனங்கள், ஈரவலயங்கள் மற்றும் வனசீவராசிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பல்வேறுபட்ட அத்திமீறிய செயல்கள் காரணமாக ஆபத்துக்குள்ளாகியுள்ள மிருகங்களின் வசிப்பிடங்கள் அழிந்துபோவதைக் குறைப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கஹல்ல - பல்லேகல சரணாலயத்தின் கலாவெவைக்கும் பலலுவெவைக்கும் உரியதான வனப் பிரதேசத்தை "கலாவெவ தேசிய பூங்கா" என பிரகடனப்படுத்துவதற்கும் இந்த சரணாலயத்தின் குருநாகல் மாவட்டத்திற்குச் சொந்தமான மீதி வனப் பிரதேசத்தை "கஹல்ல - பல்லேகல தேசிய பூங்கா" என பெயர் குறிப்பிடுவதற்கும் திருகோணமலை மாவட்டத்தின் பாசிக்குடா பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடல்வலயத்தை தழுவும் விதத்தில் "காயன்கேணி சமுத்திர இயற்கை ஒதுக்கம்" எனப் பிரகடனப்படுத்துவதற்கும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவரெட்டிய பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள கொட்டுஅத்தாவெல குளம்சார்ந்த வனப் பிரதேசத்தை "கொட்டுஅத்தாவெல சரணாலயம்" எனப் பிரகடனப்படுத்துவதற்கும் காலி மாவட்டத்தின் ஹிக்கடுவ பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள அக்குரள ஈரவலயப் பிரதேசத்தை "அக்குரல வனசீவராசிகள் சரணாயலம்" எனப் பிரகடனப்படுத்துவதற்கும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள கொடிகஹகந்த வனப் பிரதேசத்தை "கொடிகஹகந்த வனசீவராசிகள் சரணாயலம்" எனப் பிரகடனப்படுத்துவதற்கும் இலங்கையில் தென் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள சிறிய இராவணன் மற்றும் பெரிய இராவணன் வௌிச்சவீடு அமைந்துள்ள கடல் பவளப்பாறை சமுத்திரப் பிரதேசத்தை "சிறிய இராவணன் மற்றும் பெரிய இராவணன் சமுத்திர சரணாலயம்" எனப் பிரகடனப்படுத்துவதற்கும் காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள மாதுகங்க சரணாலய எல்லையைத் மீளமைப்பதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.