• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை ஹோட்டல்களை ஒழுங்குறுத்துதல்
- சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் நட்சத்திரம் 1 தொடக்கம் நட்சத்திரம் 5 வரை வகுப்பீடு செய்வதற்குரியதாக இருக்கவேண்டிய ஆகக்குறைந்த ஆற்றல் மற்றும் வசதிகளை விதித்துரைத்தல் இதற்குரிய உரிமைப்பத்திரக் கட்டணங்களை நிர்ணயித்தல், சுற்றுலாத்துறை ஹோட்டல்களினால் நடாத்திச் செல்லப்பட வேண்டிய ஒழுக்காற்றுகை சம்பந்தமான ஏற்பாடுகளைச் செய்தல், சுற்றுலாத்துறை ஹோட்டல்களைப் பதிவுசெய்தல், அதற்காக உரிமப்பத்திரங்களை வழங்குதல், சுற்றுலாத்துறை ஹோட்டல்களின் ஆகக்குறைந்த இடவசதி மற்றும் வசதிகளை நிர்ணயித்தல் ஆகிய விடயங்களுக்குரியதாக 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை சட்டத்தின் கீழ் அமைச்சரினால் 2016‑04‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 1963/28 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் விதிகளையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.