• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய உயிரினப் பல்வகைமை திறமுறை செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- 1992 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட "பூமி மாநாட்டுக்கு" ஒருங்கிணைவாக செய்துகொள்ளப்பட்ட "சர்வதேச உயிரினப் பல்வகைமை சமவாயம்" சார்பில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. இந்த சமவாயத்தின் பொறுப்புக்கூறலுக்கு அமைவாக உயிரினப் பல்வகைமை பாதுகாப்பிற்காக இலங்கையானது 1992 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை பெருமளவு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேபோன்று 2016 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ள உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு திறமுறை உள்ளடக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமொன்று உரிய தரப்பினர்களின் பங்களிப்புடன் தேசிய உயிரினப் பல்வகைமை கல்விமான்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு, உயிரின வளங்கலின் நிலையான பாவனை மற்றும் இதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் சமமாகப் பகிர்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் உயிரினப் பல்வகைமை செயற்பாட்டுத்திட்டம் 2016 - 2022 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.