• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான மொனறாகலை தொழிற்பயிற்சி நிலையத்தின் வசதிகளை விரிவுபடுத்துதல்
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான மொனறாகலை தொழிற்பயிற்சி நிலையம் 1987 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அது முதல் இது காலம் வரை அதன் வசதிகள் விரிவுபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கமைவாக, மோட்டார் தொழில், நிருமாணிப்பு மற்றும் சுற்றுலா ஹோட்டல் தொழில் போன்ற தொழிற்சந்தைகளை குறியிலக்காகக் கொண்டு 250 இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் வசதிகளுடன் பத்து பாடநெறிகளை நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் புதிய விரிவுரை கட்டடமொன்றை மொனராகலை தொழில்பயிற்சி நிலையத்தில் நிருமாணிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.