• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட எழுச்சி - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்கு வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை கையளித்தல்
- ரஜரட்ட எழுச்சி - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பின்வரும் நான்கு வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கும் உரிய ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மனம்பிட்டிய - அரலகங்வில - மாதுருஓயா வீதியை விருத்தி செய்தல்
(3.0கிலோ மீற்றரிலிருந்து 33.0 கிலோ மீற்றர் வரை).

* தெஹிஅத்தகண்டிய - அரலகங்வில வீதியை புனரமைத்தலும் விருத்தி செய்தலும்
(0கிலோ மீற்றரிலிருந்து 21.10 கிலோ மீற்றர் வரை).

* மின்னேரிய - கல்ஓயா வீதியை விருத்தி செய்தல்
(0கிலோ மீற்றரிலிருந்து 14.54 கிலோ மீற்றர் வரை).

* எலஹர - கிரிதலே வீதியை விருத்தி செய்தல்
(0கிலோ மீற்றரிலிருந்து 29.0 கிலோ மீற்றர் வரை).