• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- கொழும்பு பிரதேசத்திற்கு வெ ளியே அமைந்துள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாரா பணியாட்டொகுதியினரை தக்க வைப்பதற்கு அவர்களுக்குத் தேவையான விடுதி வசதிகளை பல்கலைக்கழக மனையிடத்திலேயே வழங்கவேண்டியுள்ளது. இதற்கமைவாக, ரஜரட்ட, றுகுணு, வயம்ப, சப்பிரகமுவ, கிழக்குமற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியாட்டொகுதியினர் சார்பில் உத்தியோகபூர்வ வீடுகளை நிருமாணிக்கும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பழைய கட்டடத்தை முழுமையாக பழுதுபார்த்து உரிய நிலைக்கு கொண்டுவருவதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.