• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் கும்பிச்சன்குளம் சார்ந்த பொழுதுபோக்கு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டம்
- அநுராதபுர நகரம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் பொது வசதிகளையும் கொண்டிருந்த போதிலும் பொழுது போக்கிற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அங்கு போதுமான அளவில் இல்லை. ஆதலால், அநுராதபுரம் கும்பிச்சன்குளத்தை துப்பரவாக்கி அதுசார்ந்த பிரதேசத்தை பொழுதுபோக்கு வசதிகளுடனான பிரதேசமொன்றாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் சார்பில் நிதி பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.