• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகால சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2016 - 2018
- அண்மைக்காலமாக இலங்கையில் உருவாகியுள்ள பிரதான தொற்றுநோய் அல்லாத நோயொன்றான காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் தற்போது வடமத்திய, ஊவா, வடமேல், வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதலாக பரவியுள்ளதோடு, தென் மாகாணத்திலும் நோயாளிகள் குறிப்பிடத்தக்க அளவு பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நோய் பாரிய சுகாதார பிரச்சினையொன்று மாத்திரமன்றி இதன்மூலம் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பல உருவாகியுள்ளன. இந்த நோயினால் உருவாகியுள்ள சுகாதார பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு தடுப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், முன்கூட்டியே நோயாளிகளை இனங்காணுதல், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், நோயாளிகளினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் நலனோம்பல், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதன் சார்பில் சனாதிபதி செயலகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள "சிறுநீரக நோய் தடுப்பு சனாதிபதி செயலணியினால்" 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் நீண்டகால சிறுநீரக நோயை தடுப்பதற்கான தேசிய திட்டத்திற்கு தேவையான நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.