• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட எழுச்சி - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவை எழுச்சி” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020 - மூன்று வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை கையளிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- ஹபரன - மட்டக்களப்பு வீதியின் (B 529) பொலன்னறுவை நகரப் பிரதேசத்திலிருந்து 7.5 கிலோ மீற்றர் தூரம் 4 பாதைகளாக அபிவிருத்தி செய்தல், தம்புள்ளை - பக்கமூன - கலகஹவெல (B 615) வீதியின் 13.6 கிலோ மீற்றர்களை விருத்தி செய்தல், மரதன்கடவெல - ஹபரன - திருக்கொன்டியாமடு வீதியின் பொலன்நறுவையிலிருந்து புதிய நகரம் வரையிலான 5.06 கீலோ மீற்றர் பகுதியை விஸ்தரித்து கார்ப்பட் இடுதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.