• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - கோட்டை - போபே (B 240) வீதியின் கொடகமவிலிருந்து போபே வரையிலான வீதிப் பிரிவினை மேம்படுத்துதல்
- சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டத்தின் கீழ் கோட்டை - போபே (B 240) வீதியின் கொடகமவிலிருந்து போபே (16.740 கிலோ மீற்றரிலிருந்து 28.004 கிலோ மீற்றர்) வரையிலான வீதிப் பிரிவினை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.