• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உடப்பு, நெடுந்தீவு, மாதகல், சாலை ஆகிய பிரதேசங்களில் பல்பணி கடற்றொழில் துறைமுகங்களை அமைத்தல்
- கடற்றொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று துறைகளையும் தழுவும் விதத்தில் இலங்கையில் பல்பணி கடற்றொழில் துறைமுகங்களை நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பெரிய மீன்பிடிப்படகுகளுக்கு வருவதற்கு இயலுமாகும் வகையிலும் குளிரூட்டல் வசதிகள், மீன்களை காயவைக்கும் வசதிகள், பொதியிடும் வசதிகள், மீன் கலன்களைப் பழுதுபார்க்கும் நிலையங்கள் என்பவற்றைக் கொண்ட வடமேல் மாகாணத்தின் உடப்புப் பிரதேசத்திலும் வடமாகாணத்தின் நெடுந்தீவு, மாதகல், சாலை ஆகிய பிரதேசங்களிலும் பல்பணி கடற்றொழில் துறைமுகங்களை நிருமாணிப்பதற்குரிய சாத்தியத் தகவாய்வு அறிக்கைகளைக் கட்டணம் அறவிடாது தயாரிப்பதற்கு கொரிய கம்பனியொன்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.