• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச ஹொரண கைத்தொழில் பேட்டை அபிவிருத்தியின் முதலாம் கட்டமாக மில்லாவ கூட்டு கைத்தொழில் பேட்டையைத் தாபித்தல்
- மேல் மாகாணத்திற்கான மாநகர திட்டத்தின் கீழ் ஹொரண மற்றும் மீரிகம பிரதேசங்களில் பாரிய தொழினுட்ப நகரங்கள் இரண்டினை தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஹொரண கைத்தொழில்பேட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சி அடிப்படையில் மில்லாவ கூட்டு கைத்தொழில் பேட்டையைத் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.