• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் தஜிகிஸ்தான் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் இடையில் அரசியல் மதியுரை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுதல்
- இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளையும் அரசியல் அதேபோன்று பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் கலாசார துறைகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் தஜிகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் இடையில் அரசியல் மதியுரை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் 2016 திசெம்பர் 13 - 15 ஆம் திகதிவரை தஜிகிஸ்தான் சனாதிபதி எமோமாலி ரஹுமான் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.