• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் தொழில் சார்ந்த திறன் அபிவிருத்தி பயிற்சிக் கருத்திட்டம்
- இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த தொழிலின் ஊடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் பங்களிப்பை மேலும் அதிகரிப்பது இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் குறிக்கோளாகும். உயர் ஆற்றல் கொண்ட இலங்கை கலைஞர்கள் வௌிநாட்டு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்வதும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் துறையில் சர்வதேச தரம்வாய்ந்த கல்வி நிறுவனமொன்றாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைக் கொண்டு வருவதையும் நோக்காகக் கொண்டு இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக திறன் அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.