• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்கால அபிவிருத்தி / திட்டமிடல் சார்பில் பயன்படுத்தக்கூடிய அணைகட்டு பாதுகாப்பு மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி திட்டங்கள்
- இலங்கை சார்பில் இற்றைப்படுத்தப்பட்ட தேசிய நீர்வளங்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ திட்டமொன்றின் தேவையெழுந்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டமும் (Mahaweli Master Plan) 1978 ஆம் ஆண்டின் பின்னர் இற்றைப்படுத்தப்படவில்லை. இதற்கமைவாக எதிர்வரும் 30 வருட காலப்பகுதிக்கான நீர்த்தேவையையும் பயன்படுத்தக்கூடிய நீர் அளவையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு "நீர் பயன்பாடு தொடர்பிலான தேசிய திட்டம்", "இற்றைப்படுத்தப்பட்ட மகாவலி நீர்வள அபிவிருத்தித் திட்டம்", “முந்தெனி ஆறு ஆற்றுப்படுகை கூட்டு நீர்வளங்கள் அபிவிருத்தித் திட்டம்" என்னும் 3 நீர்வளங்கள் திட்டங்கள் 2007 ஆம் ஆண்டில் அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நீர்வளங்கள் துறை அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனத்திற்கும் வழிகாட்டலாக எடுத்துக் கொண்டு பயன்படுத்தக்கூடிய விதத்தில் இந்த 3 திட்டங்களையும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் கட்டுக்காப்பில் வைக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.