• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பனாகொடை இராணுவ முகாமில் பிரதான மலக்கழிவு அகற்றல் முறைமையை நிருமாணித்தல்
- 1952 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பனாகொட பிரதேசத்திலுள்ள இலங்கை தரைப்படையின் இராணுவ முகாமானது பாதுகாப்பு படையணி தலைமையகம் (மேற்கு) அடங்கலாக 07 படையணி பிரிவுகள், ஆரம்ப வைத்தியசாலை, உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த முகாமில் நிலவும் பிரதான மலக்கழிவு அகற்றல் முறைமையானது சேதமடைந்தநிலையில் உள்ளதோடு, அதனை திருத்துவது பயனற்றதென தெரியவந்துள்ளது. இதற்கமைவாக பனாகொட இராணுவ முகாமிற்குப் புதிய மலக்கழிவு அகற்றல் முறைமையொன்றை 80 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.