• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராணுவ பெண்கள் படையணியின் உபயோகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- இராணுவ பெண்கள் படையணியின் தலைமையகமானது பொரளை, கிங்சி வீதியில் 92 பேர்ச்சஸ் விஸ்தீரணமுடைய காணியில் அமைந்துள்ள பழைய கட்டடமொன்றில் நடாத்திச் செல்லப்படுவதோடு, அதற்குப் பதிலாக போதுமான இடவசதிகளுடன் புதிய கட்டடமொன்றை இந்தக் காணியிலேயே 94 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.