• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சுக்களுக் கிடையிலான குழுவின் கூட்டு விஞ்ஞாபனம்
- அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான பிரச்சினைகள் சம்பந்தமாக பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவில் எடுக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டும் சட்டமா அதிபரினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுமான இந்த விடயத்திற்குரிய பணிக் கட்டமைப்பு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளின் பிரகாரம் China Merechants Port Holdings (CMPort) கம்பனியுடன் இணைந்து அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அதற்காக குறித்த முதலீட்டு கம்பனியுடனான பணிக் கட்டமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உரிய உத்தியோகத்தர்களுக்கு அதிகாரத்தை கையளிப்பதற்குமாக விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.