• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"சூரிய பல சங்கிராமய" கட்டம் 2 இன் கீழ் சிறிய அளவிலான சூரிய வலுசக்தி நிலையங்களைத் தாபித்தல்
- அதிகரித்து வரும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்வதற்கும் அதேபோன்று நாட்டின் வலுசக்தி பாதுகாப்பினை உறுதி செய்வதற்குமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் வலுசக்தி மூலவங்களின் பல்வகைமை அத்தியாவசியமானதாகும். இந்தப் பின்னணியில் சூரிய வலுசக்தி நிலையங்களை நிருமாணிப்பதற்கு முதலீட்டாளர்களின் அதிகளவான கோரிக்கைகள் நிலவுகின்ற போதிலும் தேசிய முறைமையில் மத்திய வோல்ட்டேஜ் மட்டத்துடன் இந்த ஆண்டில் சேர்க்க இயலுமென தொழினுட்ப ரீதியில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது 60 மெகாவொட் சூரிய வலுசக்தி அளவு மாத்திரமாகும். இதற்கமைவாக கொள்வனவு செய்யக்கூடிய 60 மெகாவொட் அளவினை முதலீட்டாளர் ஒருவருக்கு ஆகக்கூடுதலாக 01 மெகாவொட் அளவுகொண்ட மின் வலுசக்தி நிலையமொன்றை நிருமாணிப்பதற்கு இயலுமாகும் வகையில் முன்வந்துள்ள முதலீட்டாளர்களிடையே வெளிப்படைத் தன்மையில் நியாயமான அடிப்படையில் பகிர்ந்து "சூரிய பல சங்கிராமய கட்டம் 2” ஆக புதிய கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.