• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்கள் சார்பில் ஒப்பந்தங்களை வழங்குதல்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மண்டபத்தை நிருமாணித்தல், வயம்ப பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடமொன்றை நிருமாணித்தல் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடமொன்றை நிருமாணித்தல் ஆகிய கருத்திட்டங்களுக்குரிய ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.