• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தக ரீதியான நீர் உயிரின வளர்ப்பை மேம்படுத்துதல்
- ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடிய பெறுமதியினை பெற்றுக் கொள்ளக்கூடிய மீனின விசேடங்களை, உயர் தொழினுட்பத்தின் கீழ் வர்த்தக மட்டத்தில் வளர்ப்பதற்காக நீர் உயிரின வளர்ப்பை மேம்படுத்துவதன் மூலம் 425 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை குறியிலக்காக் கொண்ட வருமானத்தினை 2020 ஆம் ஆண்டளவில் பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைவாக புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி வர்த்தக மட்டத்தில் நீர் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களை இலங்கையின்பால் கவர்வதற்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் இதற்காக பொருத்தமான காணித் துண்டுகளையும் உள்நாட்டு கடல்நீர் பரப்பிலும் ஏனைய நீர்நிலைகளிலும் இடவசதிகளை இனங்காண்பதற்கும் அவற்றை குத்தகை அடிப்படையில் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.