• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமேல் மாகாணத்திற்கான ஐந்து ஆண்டுகால கூட்டிணைந்த திட்டம்
- வடமேல் மாகாணத்தில் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களை ஒருங்கிணைத்தல், கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றுக்கான பொறுப்பு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடமேல் மாகாணத்தில் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை குறியிலக்காக் கொண்டு கமத்தொழில், நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை, சுற்றுலாத்துறை, மனிதவள அபிவிருத்தி, முதலீட்டு மேம்பாடு, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி ஆகிய துறைகளின் கீழ் 2017 - 2021 ஐந்து (05) வருட காலப்பகுதியை தழுவும் விதத்தில் சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள "வடமேல் மாகாணத்திற்கான ஐந்து ஆண்டுகால கூட்டிணைந்த திட்டம் - 2017 - 2021” உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.