• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு சுதேச மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சார்பில் விடுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு காணியொன்றை கொள்வனவு செய்தல்
- விடுதி வசதிகள் வழங்கப்படவேண்டிய பல்கலைக்கழ மாணவர்கள் அனைவருக்கும் விடுதி வசதிகள் வழங்கப்படுவதை 2018 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழுள்ள இராஜகிரிய சுதேச மருத்துவ நிறுவனத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்களினதும் விடுதி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ள போதிலும் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட குறைந்த வசதிகளுடனான தனியார் வீடுகளில் விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன, இங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் விடுதி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றாக காணியொன்றை கொள்வனவு செய்து விடுதியொன்றை நிருமாணிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்குப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள 62 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்றை 99.5 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.