• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடலாமை பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தை நடாத்திச் செல்வதனை ஒழுங்குறுத்துவதற்கான கட்டளை
- விலங்குகள், தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் காணப்படும் அத்துடன் இந்த நாட்டின் சமுத்திர வலயத்தில் வசிக்கும் கடலாமைகள், பாதுகாக்கப்பட்ட ஊர்வனவாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அத்தகைய விலங்கினங்களை கட்டுக்காப்பில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமொன்றாகும். கரையோர பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கடலாமை முட்டைகளை கொண்டுவந்து செயற்கையாக பாதுகாத்து குட்டிகள் வெளிவந்ததன் பின்னர் இந்த குட்டிகளை கடலில் விடுவிக்கும் நோக்கில் தனியார் துறையினரால் நடாத்திச் செல்லப்படும் கடலாமை பாதுகாப்பு நிலையங்கள், விசேடமாக தென் கரையோர பிரதேசம் சார்ந்து 1980 களிலிருந்து செயற்பட்டு வருகின்றன. அத்தகைய நிலையங்கள் சுமார் 15 தற்போது தென் கரையோர பிரதேசங்களில் இயங்குவதோடு, அவை பிரபல்யமான சுற்றுலா மற்றும் பாதுகாப்பு நிலையங்களாக மாறியுள்ளன. இந்த தனியார் கடலாமை பாதுகாப்பு நிலையங்களை மேலும் ஒழுங்குறுத்தி இந்த நிலையங்களை வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து வருடாந்த உரிமப்பத்திரத்தின் கீழ் நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அவற்றை ஒழுங்குறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விலங்குகள், தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.