• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள இஹல எலஹெர கால்வாய் கருத்திட்டத்தின் சுரங்க கால்வாயின் நிருமாணிப்பு
- வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள், குடிநீர்தேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் சார்பில் மகாவலி நீரை வழங்கி கமத்தொழில் பொருளாதார பயிர் உற்பத்தியை விருத்தி செய்தல் இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் நோக்கமாகும். இதன் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இஹல எலஹெர கால்வாய் கருத்திட்டத்தின் மூலம் மொரகஹகந்த நீர்த்தேகத்திலிருந்து உருளுவெவ நீர்த்தேக்கத்திற்கு ஆண்டொன்றில் 974 மில்லியன் கனமீற்றர் நீர் கொண்டு செல்லக்கூடிய விதத்தில் 65.5 கிலோமீற்றர் நீளமான கால்வாயொன்றை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் நீளத்தில் சுமார் 26 கிலோ மீற்றர்கள் கொண்ட ஒரு பகுதி கிரிதலே மற்றும் மின்னேரியா ஆகிய சரணாலயங்கள் மற்றும் காட்டு ஒதுக்குப் பிரதேசங்கள் ஊடாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளமையினால் சுற்றாடலுக்கும் வனவிலங்குகளுக்குமான சேதங்களை ஆகக்குறைந்ததாக இந்த பகுதியை சுரங்க கால்வாய் வழியொன்றாக நிருமாணிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.