• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Rakna Arakshaka Lanka Limited கம்பனியைக் கலைத்து மூடுவது சம்பந்தமான பிரேரிப்பு
- முன்பு நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அடங்கலாக விசேட இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த படைக்கலம் தாங்கிய இராணுவவீரர்களை அந்த இடங்களிலிருந்து மீளப்பெறப்பட்டு, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தும் தேவை எழுந்தமையினால் குறித்த அத்தகைய நிறுவனங்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காக அரசாங்கத்தின் துணை பாதுகாப்புச் சேவையொன்றாக Rakna Arakshaka Lanka Limited கம்பனியானது தாபிக்கப்பட்டது. தற்போது இலங்கையில் நிலவும் சமாதான சூழ்நிலையின் கீழ் அரசாங்கத்தின் துணை தனியார் பாதுகாப்புச் சேவையொன்றை நடாத்திச் செல்லும் தேவையில்லையென தெரியவருகின்றது. இதற்கமைவாக Rakna Arakshaka Lanka Limited கம்பனியினால் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்ற தரை பாதுகாப்புப் பணிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் கடல் பாதுகாப்பு பணிகளை இலங்கை கடற்படைக்கும் கையளிப்பதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்தக் கம்பனியை கலைத்து மூடும் பணிகளை மேற்கொள்வதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு கொள்கை ரீதியில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.