• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றத்தின் போது உரிமை மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு தாமதம் ஏற்படும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் தொடர்பாக சலுகை காலத்தை 2016‑12‑31 ஆம் திகதி வரை நீடித்தல்
- உடைமை மாற்றத்தின் பின்னர், உரிமையை பதிவு செய்யாது உபயோகப்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றத்தை மேலதிக பற்றின் கீழ் பதிவு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது வழங்கப்பட்டுள்ள மூன்று (03) மாதங்களைக் கொண்ட சலுகைக் காலமானது 2016‑11‑30 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. ஏற்கனவே பெரும்பாலானோர் அத்தகைய வாகன உடைமை மாற்றங்களை பதிவு செய்வதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தந்துகொண்டிருப்பதன் காரணமாக திணைக்களத்தின் அலுவலக பணிகளின் போது சிக்கலான நிலை உருவாகியுள்ளது. இதற்கமைவாக இந்த சலுகை காலத்தை 2016‑12‑31 ஆம் திகதிவரை மேலும் ஒரு (01) மாதத்தால் நீடிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.