• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு அனுப்பீட்டு மற்றும் விநியோக விரயத்தை குறைக்கும் கருத்திட்டம்
- பாரிய கொழும்பு பிரதேசத்தின் மின்சார அனுப்பீட்டு மற்றும் விநியோக முறைமையை விருத்தி செய்வதன் மூலம் அனுப்பீடு மற்றும் விநியோக முறைமையைப் பலப்படுத்தி மின்சார முறைமையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும் விரையத்தைக் குறைப்பதன் மூலமும் இந்தப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு நல்கும் நோக்கில் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் கடன் வசதியின் கீழ் பாரிய கொழும்பு அனுப்பீட்டு மற்றும் விநியோக விரயத்தை குறைக்கும் கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் பொதி இலக்கம் 3 இன் கீழ் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்குத் தேவையான விசேட வாகனங்களை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கைளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர். ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.