• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தங்கல்ல, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மித்தெனிய பிரதேசங்களில் பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்களை பூர்த்தி செய்தல்
- தற்போது பகுதி அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தங்கல்ல மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ வர்த்தக கட்டடத்தொகுதியின் நிருமாணிப்பு, மித்தெனிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நடைபாதை நிருமாணிப்பு ஆகிய கருத்திட்டங்களின் மீதி வேலைகளை போட்டி கேள்வி முறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் புதிய ஒப்பந்தக்காரர்களின் மூலம் 60.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் பூர்த்தி செய்வதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.