• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு 40-46 இருக்கைகள் கொண்ட 1,000 புதிய பயணிகள் பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை போக்குவரத்து சபையின் 1,000 பழைய பேருந்துகளை பழுது பார்ப்பதற்கு கேள்வி கோரப்பட்டாலும் அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு அமைவாக பேருந்தொன்றை பழுதுபார்ப்பதற்கான செலவானது புதிய பேருந்தொன்றை கொள்வனவு செய்வதற்காக செலவாகும் தொகைக்கு கிட்டிய அளவில் உள்ளதனால் அது பொருளாதார ரீதியில் பயனற்றதென தெரியவருகின்றது. ஆதலால் 1000 பேருந்துகளை பழுதுபார்க்கும் கருத்திட்டத்தை இடைநிறுத்துவதற்கும் அதற்குப் பதிலாக 40-46 (2x2) உயரமான பின்புற இருக்கைகள் கொண்ட 1,000 புதிய பயணிகள் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.