• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்மானி உள்ளடக்கங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்தல்
- இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கும் வருடாந்தம் தேவைப்படும் 250,000 மேற்பட்ட மின்மானி உள்ளடக்கங்கள் போட்டி கேள்வி கோரும் அடிப்படையில் திறந்த சந்தையிலிருந்து தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதோடு, பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் உருவாகும் பற்றாக்குறை காரணமாக நுகர்வோரின் கேள்விகளுக்கு உரிய வகையில் வழங்குவதற்கு இயலாமற்போயுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு மாற்று வழியாக மின்மானி உள்ளடக்கங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை இலங்கை மின்சாரசபைக்கு முழுமையாக சொந்தமான துணைக் கம்பனியொன்றான Sri Lanka Energies Private Limited கம்பனியின் ஊடாக கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ கைத்தொழில் பேட்டையில் தாபிப்பதற்கும் இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்மானி உள்ளடக்கங்களை இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கும் வழங்குவதற்குமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர். ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.