• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேற்கு பிராந்திய மாநகர அபிவிருத்திக்குத் தேவையான புதிய பயன்பாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
- மேற்கு பிராந்திய மாநகர அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தின் கீழ் இனங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக போக்குவரத்து சேவைகள், மின்சாரம், நீர், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றுதல் போன்ற அத்தியாவசிய பயன்பாட்டு சேவைகளுக்கு கூடிய கேள்வி உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமைக்கு முகம் கொடுக்கும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வீதி முறைமை சார்பில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள்:

* பேஸ்லைன் வீதியை காலி வீதிவரை நீடித்தல்;

* தற்போது நிருமாணிக்கப்பட்டுவரும் பொல்தூவ - கொஸ்வத்த வீதியை கொலன்னாவை ஊடாக களனி வரை நீடித்து இணைத்தல்;

* 120 வசுவழி வீதியை பாமன்கடை பாலத்திலிருந்து டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை வரை விஸ்தரித்தல்;

* மாகும்புர பல்வகை போக்குவரத்து மைய நிலையத்திலிருந்து மாஹேனவத்தை விஞ்ஞான, தொழினுட்ப நகரத்திற்குப் புதிய அதிவேக போக்குவரத்துப் பாதையொன்றை நிருமாணித்தல்;

* கொஹூவெல சந்தி மற்றும் காசல் மருத்துவமனை அருகாமையில் புகையிரதக் கடவைக்கு குறுக்காக புதிய மேற்பாலங்களை நிருமாணித்தல்;

* பத்தரமுல்லை, கட்டுநாயக்க, கடவத்தை, மொறட்டுவ மற்றும் பானந்துறை சார்ந்த நவீன பல்வகை போக்குவரத்து மைய நிலையங்களை நிருமாணித்தலும் நகரங்களுக்கான பேரூந்துப் போக்குவரத்தை ஒழுங்குமுறைப்படுத்தல்;

* களனி பாலத்திலிருந்து ஒருகொடவத்தை ஊடாக ராஜகிரிய வரை தூண்களின் மீது செல்லும் உத்தேச தூண்களின் மீது செல்லும் உயர் வீதியை பத்தரமுல்லை நிருவாக நகரத்தை தழுவிச் செல்லும் விதத்தில் வௌிச்சுற்றுவட்ட வீதிவரை நீடித்தல்.

இவற்றுள் சில கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஏற்கனவே ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திண்மக் கழிவு முகாமைத்துவம்:

* தெரிவுசெய்து வேறாக்குதல் அல்லது எரித்தல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி நகர திண்மக் கழிவு அப்புறப்படுத்தல் தொகுதிகளை மேலும் விருத்தி செய்தல்.

தேவையான நீர் விநியோகத்தை உறுதி செய்தல்:

* அதிகரித்துவரும் குடிநீர் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக களனிகங்கையின் கிளை கங்கைகளான சீத்தாவக்க கங்கை மற்றும் வீ ஓயா அருகாமையில் பாரிய நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி;

* கழிவுநீர் மீள்சூழற்சியின் மூலம் குடிநீர் அல்லாத வேறு தேவைகளுக்காக பயன்படுத்துதல்;

* மின்சார கேள்வி குறைவான நேரங்களில் மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை நீக்குதல்.

இதற்கு மேலதிகமாக, குடிநீர் விநியோகத்திற்காக கங்கை நீரை சேமித்து வைக்கும் நோக்குடன் கைத்தொழில்கள் சார்பில் நிலக்கீழ் நீரை மிகக்கூடுதலான அளவு பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பில் நீர் வளங்கல் சபையினால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென்பதுவும் நிலக்கீழ்நீர் வளத்தினை பயன்படுத்துவது சம்பந்தமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென்பதுவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.