• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்காக மாணவர் விடுதியொன்றை நிருமாணித்தல்
- ஜேர்மன் நாட்டின் உதவியின் கீழ் நிருமாணிக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி (ஜேர்மன் ரெக்) நிறுவனத்தில் தற்போது 10 முழுநேர பாடநெறிகள் நாடத்தப்பட்டு வருகின்றதோடு, நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகைதரும் சுமார் 2,000 மாணவர்கள் இந்த பாடநெறிகளை கற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை 2017 ஆம் ஆண்டு இறுதியில் மேலும் 200 ஆல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாணவர்களுக்கு தரம் மிக்க கல்விக்குத் தேவையான சூழலினை உருவாக்கும் பொருட்டு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவது முக்கியமானதாகும். இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்திற்காக சுமார் 1000 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ஐந்து (05) மாடிகளைக் கொண்ட விடுதியொன்றை 280 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் நிருமாணிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.