• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேற்கு வலயத்தின் மாநகர பிரதேசத்தின் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- மேற்குவலய பிரதேசத்தில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்குத் தேவையான பயன்பாட்டு சேவைகளை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. இந்த வலயத்திலுள்ள மக்கள் தொகையின் 97.3 சதவீதமானோருக்கு ஆரோக்கியமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான வழிவகை இருப்பதோடு, அதில் 57.5 சதவீதமானோர் குழாய்நீர் விநியோக சேவைமூலம் தழுவப்படுகின்றனர். இந்த வலயத்திலுள்ள 19 நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் நாளொன்றுக்கு 1,078,520 கன மீற்றர் நீர் சுத்திகரிக்கப்படுகின்றது. 2030 ஆம் ஆண்டளவில் இந்த வலயத்தில் வசிப்பார்களென எதிர்பார்க்கப்படும் 8.7 மில்லியன் சனத்தொகைக்கு நாளொன்றுக்கு தேவைப்படுமெனக் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 2,200,000 கன மீற்றர் நீரை விநியோகிக்கும் பொருட்டு புதிய நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்கள், மீரிகம தொழினுட்ப துணைநகரம், உத்தேச மீரிகம விமான நகரம், திவுலபிட்டிய, ஹேமாகம, ஹொரன மற்றும் சுற்றுப் பிரதேசங்களைத் தழுவும் விதத்தில் 5 புதிய நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.