• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சி பங்களிப்பு மூலம் உள்நாட்டு விமானசேவையொன்றைத் தாபித்தல்
- சர்வதேச சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உரிய தகுதிவிதிகளுக்கு அமைவாக சிவில் பயணிகள் போக்குவரத்திற்காக அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக உள்ளக விமான சேவையொன்றைத் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை விமானப்படையுடன் இணைந்து அத்தகைய கூட்டு தொழில்முயற்சி யொன்றை ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவுசெய்யும் நோக்கில் போதுமான நிதி ஆற்றல் மிக்க தனியார் தரப்பினர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோரும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.