• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேச எல்லை முகாமைத்துவ குழுவைத் தாபித்தல்
- நாடொன்றின் தேச எல்லையை பரிபாலித்தல் குறித்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானதோடு, இதன் மூலம் நாட்டின் இறைமை பாதுகாக்கப்படுவதனையும் உறுதிபடுத்துகின்றது. இலங்கையின் தேச எல்லையூடாக பயணிக்கும் ஆட்களினதும் கொண்டு செல்லப்படும் பொருட்களின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதோடு, 2020 ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் ஆட்களும் 200 மில்லியன் கிலோகிராமுக்கு மேற்பட்ட பொருட்களும் இலங்கையின் தேச எல்லையூடாக அங்குமிங்கும் கொண்டு செல்லப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால் நாட்டின் தேசிய பாதுகாப்பு, சமூக அமைப்பு மற்றும் பொருளாதார விருத்தியினை பேணுதல் என்பன பொருட்டு தேச எலலையூடாக மேற்கொள்ளப்படும் குறித்த பணிகளை உரிய வகையில் முகாமிப்பது முக்கியமானதாகும். இதற்கமைவாக பல நிறுவனங்களின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இலஙகையின் தேச எல்லை முகாமைத்துவத்தின் சகல பிரிவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி, ஆபத்து, முன்னுரிமை மற்றும் குறியிலக்கு ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக அரசாங்கத்தின் மைய நிறுவனமொன்றாக இயங்கும் அரசாங்கத்தின் சிரேட்ட உத்தியோகத்தர்களையும் / கொள்கை வகுப்பாளர்களையும் கொண்ட "தேச எல்லை முகாமைத்துவ குழுவொன்றை" தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.