• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோயாளிகளுக்கு மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- நோயாளிகளுக்கு மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் I.V.Cannula (ஊசி போர்ட்டுடனும் போர்ட் இன்றியும்) உபகரணங்கள் பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.