• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் கிடைக்கப் பெறாத நீர் விநியோக பிரதேசங்களின் முகாமைத்துவம் மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வை மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
- கொழும்பு நகரத்தினுள்ளும் அதன் சுற்றுப் பிரதேசத்திலும் குழாய் நீர் கசிவு மற்றும் கட்டணம் செலுத்தாது நீர் பெற்றுக் கொள்தல் என்பவற்றை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் குறைக்கும் நோக்கில் கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு கிழக்கு பிரதேசங்களில் நீர்வழங்கல் சேவையை விருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உதவியளிக்கப்படும் பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 1 ஆம் இலக்க கருத்திட்டத்தில் வருமானம் கிடைக்கப் பெறாத நீர் விநியோக பிரதேசங்களின் முகாமைத்துவம் மற்றும் கருத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் நிருமாணிப்பு மேற்பார்வைக்காக மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.